search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வாக்களிப்பு"

    ஐ.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்தது ஏன் என்பது குறித்து இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பலோமி திரிபாதி விளக்கம் அளித்தார். #UN #India #DeathPenalty
    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச் சபையின் 3-வது குழு சார்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது.

    அதில், இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன.

    மேலும் இந்த வாக்கெடுப்பில் 36 நாடுகள் கலந்து கொள்ளவில்லை.



    மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஏன் என்பது குறித்து ஐ.நா. சபையின் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பலோமி திரிபாதி பேசினார்.

    அப்போது இந்த தீர்மானம் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்திலும், தற்காலிகமாக ஒத்திவைக்கும் நிலையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இது இந்திய சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த தீர்மானத்துக்கு எனது முழு எதிர்ப்பை தெரிவிக்கிறேன் என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் மிகவும் அரிதாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கு குற்றங்கள் மிகவும் வெறுப்பாக பார்க்கப்படுகிறது. அவற்றை சமூகத்தினர் தங்கள் மனசாட்சிக்கு எதிராக கருதுகின்றனர்.

    குற்றவாளிகள் மீதான வழக்குகள் சுதந்திரமாக செயல்படும் கோர்ட்டுகள் மூலம் விசாரிக்கப்படுகின்றன. தண்டனையை பரிசீலனை செய்ய மேல்முறையீட்டுக்கு உரிமை வழங்கப்படுகிறது’’ என்றார். #UN #India #DeathPenalty
    ×